சிமெந்து விலை அதிகரிப்பை அரசு இரத்துச் செய்ய வேண்டும் !

Thursday, March 8th, 2018

சிமெந்து  ஒரு பைக்கற்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என அரசு விடுத்துள்ள கோரிக்கையை விரைந்து இரத்து செய்ய வேண்டும் என்ற தேசிய நுகர்வேர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார் .

சிமெந்து விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு இலங்கையில் சிமெந்து தயாரிப்பு நிறுவனங்களாக இரு பிரதான நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. அதே சந்தர்ப்பத்தில் மேலதிகமாக 24 சீமெந்து நிறுவனங்களும் இயங்கி வருகின்றன வருடத்திற்க சிறப்பான வருமானங்களை  ஈட்டுபவையாகவும் இந்த் சிமெந்து நிறுவனங்கள் காணப்படுகின்றன

கடந்த 2003 ஆம் ஆண்டு நுகர்வோர் தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் நோக்கும் போது சிமேந்து விலை அதிகரிப்பதற்காண நுகர்வேர் விவகாரங்கள் தொடர்பான ஆணையகத்தில் தனது அனுமதியைக் கோரல் வேண்டும். ஆனால் கடந்த வாரத்தில் ஒல்சிம் சிமேந்தின் விலை 30 ரூபாவால் அதிகரித்த விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

சிலரின் அரசியல் நோக்கத்துக்காகவே இந்த விலை உயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ஒல்சிம் சிமெந்த பக்கற் ஒன்றின் விலை 960 ரூபா அதிக விலையில் விற்கப்படுகின்றது .இது நுகர்வோரின் உரிமைகளை மீறும் வகையில் உள்ளன .

இதனால் நுகர்வேர் சிமேந்து கொள்வனவு செய்வதில் பெரும் சிக்கலினை மேற் கோண்டு வருகின்றனர் சிமேந்து விலை அதிகரிப்பு தொடர்பில் விரைந்து தீர்மானத்தை அரசு எடுக்கவேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

Related posts:

குறைந்த வருமானம் பெறும் இரண்டு இலட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ஆரம்பத் திட்டம் நாளைமுதல் ஆரம்பம் ...
செட்டிகுள வைத்தியசாலையின் தேவைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்...
சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -பொது சுகாதார பரிசோதகர்...