சாவகச்சேரியில் மூன்று வீடுகளில் 20 பவுண் தங்க நகைகள் கொள்ளை!

Wednesday, November 29th, 2017

யாழ். சாவகச்சேரி கல்வயல் சண்முகானந்தா வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை(28) அதிகாலை அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 20 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கல்வயல் புலுட்டையன் பிள்ளையார் ஆலயக் கணக்காளரின் வீட்டில் 16 பவுண் நகைகளும், அயலிலுள்ள ஏனைய இரு வீடுகளுமாக மொத்தம்- 20 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

முன் கதவினைக் கூரிய ஆயுதமொன்றினால் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்களே இந்தக் கைவரிசையைக் காட்டியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:


கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெ...
இயற்கை அனர்த்தங்களின் போது அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம் - இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ வல...
நாட்டில் அதிக மழைவீழ்ச்சி: மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு - ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகள...