சார்க் அமைப்பின் பணிகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம்: ஜனாதிபதி!

Saturday, September 23rd, 2017

தெற்காசிய விவகாரங்கள் தொடர்பாக இணைந்து செயற்படக் கூடிய அமைப்பான சார்க் அமைப்பின் பணிகளை சிக்கல்கள் இன்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்த போது கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்தின் பிரதமர் ஷேர் பகதூர் தேஹூபாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாக உள்ளது.இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், சமய மற்றும் கலாச்சார உறவுகளை புதிய வழிகளின் ஊடாக முன்னெடுத்துச் செல்லது குறித்து இரண்டு நாடுகளின் தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: