சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி இன்று (27) ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் நாட்டிலுள்ள 86 பாடசாலைகள் மற்றும் 111 மத்திய நிலையங்கள் இதற்காக ஏற்பாடு செய்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இந்த முதற்கட்ட பணிகள் இன்று 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05 ஆம் திகதி வரையில் நடைபெறு என்றும் தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த நாட்டில் 57 நகரங்களில் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மருத்துவர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் - மருத்துவ அதிகாரிகள் சங்...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ரவுடிக் கும்பல் அட்டகாசம் : ஒருவர் ஆபத்தான நிலையில் - பாதுகாப்பு ...
திருக்கோவில் மண்டியாவெளிகுளம் அணைக்கட்டு உடைப்பு!
|
|