சாதாரணதரப் பரீட்சையில் வடக்கு, கிழக்குக்கு மோசமான பெறுபேறு!

Monday, April 24th, 2017

அண்மையில் வெளியான சாதாரண தரப் பரீட்சையில் மாகாண அடிப்படையில் வடக்கு மாகாணம் 8 ஆவது இடத்திலும், கிழக்கு மாகாணம் 9 ஆவது இடத்திலும் உள்ளன. 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த 2 மாகாணங்களும் கடைசி இடங்களில் இருந்து வருகின்றன.

ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சை முடிவுகளில் திருகோணமலை கல்வி வலயத்தைச் சேர்ந்த 5 பாடசாலைகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன.  இந்தப் பரீட்சை முடிவுகளை பகுப்பாய்வு செய்த போது நாடெங்கும் 131 அந்தப் பாடசாலைகளிலிருந்து ஒரு மாணவரேனும் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறும் வகையில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது,

கண்டி, காலி, கேகாலை ஆகிய கல்வி வலயங்கயைச் சேர்ந்த 6 பாடசாலைகளில் இருந்தும், களுத்துறை, திருகோணமலை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த தலா 5 பாடசாலைகளில் இருந்தும், பிலியந்தல, மினுவாங்கொட, குருநாகல, தெகியோவிற்ற கல்வி வலயங்களைச் சேர்ந்த தலா 4 பாடசாலைகளில் இருந்தும் எந்தவொரு மாணவரும் உயர்தரம் கற்கும் தகுதி பெறவில்லை. என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

Related posts: