சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம் – ஒரு வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்ப்பு!

Saturday, July 30th, 2022

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் எதிர்க் கட்சியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. அத்துடன் இந்த பேச்சுவார்த்தை இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்படுகின்றது

இதனடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன், ஒரு கட்சி என்ற வகையில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாது என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனித்தனியாக ஆளும் தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும், ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து நேற்று ஜனாதிபதிக்கு சாதகமான சமிக்ஞையை அனுப்பி வைத்துள்ளது.

நாட்டை பாதாளத்தில் இருந்து மீட்டெடுக்க ஜனாதிபதி உண்மையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: