சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவிப்பு!.

Thursday, April 4th, 2024

”சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகள் நிறைவு பெறும்வரை எந்த தேர்தலையும் நடத்த போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் செயற்பாடுகள் எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவடைவதாக குறிப்பிடப்படுகின்றது. பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னர் எந்த தேர்தலும் நடத்தப்படாது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு தான் ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்துக்கு அமைய நாட்டின் அரசியலமைப்பு இயற்றப்படவில்லை.

ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் சரித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்.பொதுநூலகத்தில் போக்குவரத்து விதி முறைகள் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிச...
கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதமே யாழ் ராணி மாலையில் தாமதிக்கின்றது - அனுரா...
மாணவர்களுக்கு பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம் - கல்வி மற்றும் பரீட்சை முறையிலும் மாற்றம் செய்வது...