சரிவின் பின்னர் மீதொட்டமுல்லயில் திடீர் புவியியல் மாற்றம்

Tuesday, April 18th, 2017

எதிர்வரும் காலங்களில் மழை பெய்தால் மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீண்டும் அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பின் மண் சரிவு ஆய்வு மற்றும் ஆபத்து தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் இயக்குனர் ஆர்.டிம்.எஸ்.பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்

உண்மையில் குப்பை மேடு சரியவில்லை, குப்பை மேட்டின் பாரத்திற்கு மண் மேடு உடைந்து விழுந்துள்ளது. இங்கு குப்பை மேட்டை சுற்றியுள்ள வீடுகள் ஒரு பக்கம் தள்ளப்பட்டுள்ளதுடன், மேல் பக்கமாக உயர்ந்துள்ளது. இந்த நிலைமையை நாங்கள் மண் சரிவு அனர்த்தமாகவே கருதுவோம்.

இவ்வாறான சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். தற்போதைக்கு குப்பை மேட்டில் குப்பை போடாமையினால் ஆபத்துக்கள் இல்லை. எனினும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் குப்பை மேட்டில் மற்றுமொரு அனர்த்தம் ஏற்பட கூடும். இதனால் குப்பை மேட்டியை சுற்றி ஆபத்தான எல்லையாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான பகுதியில் கிட்டத்தட்ட 130 வீடுகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


வாக்கெடுப்பின் மறுநாள் வாக்கெண்னும் பணிகளை நடத்த தீர்மானித்துள்ளதால் பொது மக்கள் மத்தியில் சந்தேகம் ...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பௌத்தர்களின் உயர்ந்த பண்பினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு கிடைத்த சிறந...
சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு - 253 குடும்பங்கள் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய ந...