சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்வு!

Wednesday, October 19th, 2016

சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அப் பகுதியில் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  எனினும் அது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் வெளிப்படுத்திய பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.  இதனையடுத்து சூரிய சக்தியில் இயங்கக் கூடிய மின் உற்பத்தி நிலையத்தை அப் பகுதியில் அமைப்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இதன்படி சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும் என்பதோடு, அதிக செலவீனமும் ஏற்படாது எனத் தெரிகிறது.

903375320Untitled-1

Related posts: