சமூக பாதுகாப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் வருடாந்தம் 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பு!

Friday, September 9th, 2022

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தின் மூலம் வருடத்திற்கு 140 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வருடாந்த வருமானம் 120 மில்லியனைத் தாண்டியவர்கள் வரிக்கு உட்பட்டவர்கள் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 81 பெரும்பான்மை வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது 2022 வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது அரசாங்க வருவாயை அதிகரிக்கும் மற்றும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பின்மை குறித்து அதிர்ச்சியடைந்தோம் - தேசிய சமாதான பேரவை!
நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க ரணில் விக்ரமசிங்க உள்...
ஆண்டு இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்கைளை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் - ஜனாதிபதியின் பணிக்கு...