சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் உண்மையானவையல்ல – இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020

ஐஎஸ் அமைப்பினால் இலங்கைக்கு ஆபத்து என சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் உண்மையானவையல்ல என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அரச அமைப்பொன்றின் முத்திரையுடன் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கை குறித்தே இராணுவம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அரச அமைப்பொன்றிற்குள் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஆவணத்தை அடிப்படையாக வைத்து பொருளாதார இலக்கொன்று தாக்கப்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் படையினர் இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளனர் என தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க இது தொடர்பில் பொதுமக்களை அச்சமடையவோ பதட்டமடையவோ வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: