சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021

சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை விற்பனை செய்வதற்கு எந்தவித ஏற்பாடும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்ததுடன், இதனை கொள்வனவு செய்வதற்கு எவரும் முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பல்கலை மாணவரின் பங்களிப்பு அளப்பரியது – யாழ்.மாவட்டச் செயலாளர்...
நாடு முழுவதும் நாளைமுதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது - இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
06 மாதங்கள் முதல் 03 வயது வரையான குழந்தைகளுக்கு மீண்டும் ‘திரிபோஷா’- உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அன...