சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த உத்தரவு!

Wednesday, August 23rd, 2017

 

யாழில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த ஏழு பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி காயத்திரி சைலவன் இன்று உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், அன்றைய தினம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தவும் நீதிபதி பணித்துள்ளார்.

கடந்த மாதம் யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சந்தேகநபர்களை கைது செய்திருந்தனர்.

Related posts: