சட்டவிரோதமாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Thursday, December 9th, 2021

சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்துக்கு புறம்பான வகையில் பணம் அனுப்பும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அத்துடன் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற கணக்குகள் தடை செய்யப்படுகின்றன.

சட்டவிரோதமாக நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம். உரிய முறையில் நாட்டுக்கு பணத்தை அனுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

சட்டவிரோத கணக்குகளுக்குத் தடை விதிப்பதற்கான அதிகாரம் காணப்படுகின்றது. யுத்த காலத்திலும் இவ்வாறான கணக்குகள் தடை செய்யப்பட்டன.

எனவே, உரிய முறையில் பணத்தை அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக கப்ரால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: