சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 29 பேர் மீளவும் விளக்கமறியலில்!

Friday, June 7th, 2019

சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்ட 29 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 29 பேரும் காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்படி சந்தேகநபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் சிலாபம் கடற்பரப்பில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்து கொண்டிருந்த போது 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் சிறார்கள், பெண்கள் அடங்கலாக 12 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: