சட்டநாதர் வீதியில்  இருவர் மீது வாள் வெட்டு

Thursday, May 5th, 2016

நல்லூர் சட்டநாதர் வீதியில் இனந்தெரியாத இருவர்  இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டிய கொடூர சம்பவம் நேற்று(4) இரவு நடைபெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைவதற்காக இந்த இனந்தெரியாத நபர்கள் இரவு 9.20 மணியளவில் வீட்டின் முன் கதவினை கோடரியால் வெட்டியுள்ளனர்.

எனினும் வீட்டின் உள்ளே நுழைய முடியாத இனந்தெரியாத நபர்கள், வீட்டை உடைக்கும் முயற்சியினை கைவிட்டு விட்டு செல்லும் போது, அந்த வீதியால் ஆட்டோவில் பயணித்த ஆட்டோ சாரதி மீதும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீதும் வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.

மதிவேந்தன் கேதீசன் (வயது 24) என்ற இளைஞரும், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மகநே்திரன் கபில்ராஜ் (வயது 18) என்ற இளைஞரும் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

வீட்டுக் கதவினை இனந்தெரியாத நபர்கள் கோடரியால் வெட்டிய சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் நேற்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: