சகோதர இன மக்களின் மனங்களை வெற்றிகொள்வது அவசியம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

தென்னிலங்கையில் வாழும் சகோதர மக்களது மனங்களை வென்றெடுப்பதனூடாகத்தான் இந்நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை வென்றெடுக்கமுடியும். அதற்கான முன்னகர்வகளை நாம் நீண்டகாலமாக முன்னெடுத்து வருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்
கட்சியின் தெல்லிப்பளை பிரதேச அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஆனால் மாற்றுத் தமிழ் தரப்பினர் தமது அரசியல் இருப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்காக அத்தகைய உரிய முறையில் அணுகாது தட்டிக்களித்து வருவதனால் முழுமையாக அந்த மக்களது மனங்களை வென்றெடுக்க முடியாதுள்ளது
தேசியம் பேசுபவர்களது பேச்சுக்களால் எமது மக்கள் அழிவுகளையும் நிம்மதியிழந்த வாழ்வையும் தவிர வேறெதனை பெற்றுள்ளனர். ஆனால் நாம் முன்னெடுத்துவரும் தேசியம் மக்கள்மீது அக்கறையுள்ளதாக இருந்துவருகின்றமையால் தான் இன்று அது வெற்றிகண்டுள்ளது.
எமது மக்கள் தமக்கான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதில் உறுதியாகவே உள்ளனர். இதனால் தமிழ் மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்தவேண்டிய தேவைப்பாடு இன்று தேவையானதொன்றாகும்.
மாறாக தென்னிலங்கை மக்களுக்கே எமது தேவைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. இதை செய்யாத மாற்றுத் தமிழ் அரசியல் தரப்பினர் தேசியம் என்ற போர்வையில் தமது சுயநல அரசியலை செய்து வருவதனூடாக அவர்கள் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
தென்னிலகை மக்களது மனங்களை வென்றெடுத்துள்ள எமது அரசியல் வழிமுறையைக்கொண்டு தமிழ் மக்களது அரசியல் உரிமை சார் பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வை அடைய முடியும் என நாம் உறுதிபட நம்புகின்றோம்
எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடத்தச் செல்லும் அரசியல் பாதையை நோக்கி தமிழ் மக்கள் அணிதிரண்டுவருவார்களானால் இன்றுவரை தீராப் பிரச்சினையாக இருந்துவரும் எமது இனத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வை கண்டுகோள்ளமுடியும்
கட்சியின் தெல்லிப்பழை பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன் அகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|