க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஒரு வாரம் நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, September 1st, 2020

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பீஜித தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகளிடம் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாமையினால் விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் நடாத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: