கோர விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் பலி!

Monday, July 29th, 2019

மதவாச்சி வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் வஹாமலுகொல்லேவ பிரதேசத்தில் லொறி ஒன்றும் பேருந்தும் மோதிக் கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் உயிரிழந்த மூன்று பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அத்துடன் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: