கோர விபத்து: பெண்கள் உட்பட 5 பேர் பலி !

Wednesday, June 19th, 2019

பொலன்னறுவையில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலையில்  இடம்பெற்ற இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் வெலிகந்த பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பெலியத்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 29 – 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திம்புலாகல, மிஹிது பெரஹராவை பார்வையிட சென்று மீண்டும் வீடு திரும்பியவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அதிக வேகமும், வான் சாரதியின் கவனயீனமுமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts: