கோரிக்கைகளுக்கு தீர்வு கிடையாதுவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை – பல்கலை. கல்விசாரா ஊழியர்கள்

Friday, April 1st, 2016
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று(31) தங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஷ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே குறிப்பிட்டார்.
சகல பல்கலைக்கழகங்களினதும் செயற்பாடுகள் நேற்று பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். இதுகுறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை எனவும், அவற்றுக்கு தீர்வு வழங்கும் பொருட்டு ஏற்கனவே திறைசேரிக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Related posts: