கோதுமை மா விலை அதிகரிப்பு – உறுதிப்படுத்தியது ப்றீமா நிறுவனம் !

Monday, November 29th, 2021

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்றீமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த  சனிக்கிழமை 27 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாண் மற்றும் சிற்றுண்டி வகைகளின் விலை இன்றுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில வர்த்தகர்கள் அதனை பழைய விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

விலை அதிகரிப்பிற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட கோதுமை மா கையிருப்பில் உள்ளமையினால் பழைய விலைக்கு குறித்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்றுமுதல் அமுலாகும் வகையில் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் என்பன அறிவித்திருந்தன.

எவ்வாறாயினும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நுகர்வோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: