கொழும்பை அச்சுறுத்தும் கொரோனா : இன்றும் மூவர் அடையாளம் காணப்பட்டனர் – இலங்கையின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, April 21st, 2020

இலங்கையில் இன்று மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 100 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் சுமார் 242 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1010 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் குறித்த பகுதியில் பதிவாகி இருந்தமையே இந்த தனிமைப்படுத்தலுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலை எட்டியுள்ளதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது வரை 280 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 30 பேருக்கு தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அரச மருத்துவ சங்கம் தீர்மானித்தது.

இதேவேளை பிலியந்தலை பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பேலியகொடை பகுதியில் உள்ள மீன் சந்தையை நாளை 22 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வியாபாரி ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று மீன் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுட்டதை தொடர்ந்தே மேற்படி சந்தையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் 154 மீன் கடைகள் உள்ளன. அதன் விற்பனையாளர்கள் நாளை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: