கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Monday, August 30th, 2021

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 96 ஆயிரத்து 454 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் கொரோனா மூன்றாவது அலையில் தொற்று உறுதியான 64 ஆயிரத்து 157 பேரும் அடங்குகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் 77 ஆயிரத்து  633 பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்று உறுதியான 43 ஆயிரத்து 332 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று மாவட்டங்களை தொடர்ந்து காலி மாவட்டத்திலேயே அதிகளவானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

காலி மாவட்டத்தில் இதுவரையில் 22 ஆயிரத்து 996 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: