கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!

கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் இன்றுமுதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் காலை 9.30 முதல் 2.30 வரை இடம்பெற்றது. இருப்பினும் இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகிய நடவடிக்கைகள் பிற்பகல் 1 மணியுடன் நிறைவந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மூடப்பட்ட கொழும்பு பங்கு சந்தை 7 வாரங்களின் பின்னர் இன்று மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களே அவதானம் - எச்சரிக்கிறது வளிமண்டலத் திணைக்களம்!
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம் -தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் எச்சரிக்கை...
உள்ளூர் சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை இருக்காது - லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு!
|
|