கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகப்பு – சிறைச்சாலைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ளது தவிர்க்கப்படுவதாக அறிவிப்பு!

Friday, November 13th, 2020

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலைகளில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களை சபை அமர்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரேமலால் ஜயசேகர மற்றும் எதிர்க்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் ஆகிய மூவரையும் சபைக்குள் அழைத்து வராமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: