கொரோனா வைரஸ் தாண்டவம்: இலங்கையில் பதிவானது முதல் மரணம்!

Saturday, March 28th, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இலங்கையில் குறித்த நோய் தொற்றுக்கு இலக்காகிப் பலியான முதலாவது சம்பவம் பதிவாகியுள்ளது

65 வயதுடைய குறித்த நபர் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறு நீரக பொருத்தும் சத்திர சிகிச்சைக்குட்பட்டவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித உயிரை பலியெடுத்துவரும் இந்த கொரோனா நோயினால் இலங்கையில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அங்கொடை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே இன்றையதினம் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் 103 பேர் குறித்த நோய் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 199 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

இதனிடையே கொரோனா தொற்றிலிருந்து 9 நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் மத்தியில் தவறான போலிப் பிரசாரங்களைப் பரப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும்  - ஜனாதிபதி எச்...
இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும் - உலக இந்துக் குழு இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!
குறிகாட்டுவான் இறங்குதுறை வலுவிழப்பு - கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள...