கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு : 600 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Saturday, November 28th, 2020

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் சிறைக் கைதிகள் 600 பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது

சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக் கைதிகள் 600 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்தவர்களை விடுதலை செய்வது தொடர்பில் சிறைச்சாலைகள் மற்றும் நீதித்துறை முக்கியஸ்தர்களுக்கிடையில் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

மிகக் குறைந்தளவு போதைப்பொருள் வைத்திருந்து குற்றவாளிகளாக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுவிப்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் 600 பேர் விடுதலை செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: