கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு – நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை நெருங்குவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Thursday, July 29th, 2021

நேற்றையதினம் (27) நாட்டில் மேலும் 63 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நாட்டில் மேலும் ஆயிரத்து 919 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாட்டின் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 71 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: