கொரோனா பரிசோதனை – யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி – பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
Thursday, July 2nd, 2020யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் 69 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட போதே குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வவுனியா தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களில் இன்று 12 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெற்றோல் தட்டுப்பாடு: முகவர்களே காரணம் என்கிறது அரசாங்கம்!
அரசாங்க ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி !
உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோர தேவையில்லை - ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக...
|
|