கொரோனா தொற்றிலிருந்து வழமைக்கு திரும்பிய வுஹான் நகரம்!

Wednesday, April 8th, 2020

கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த சீனாவின் வுஹான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 76 நாட்களாக முற்று முழுதாக வெளிநகர தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த சீனாவின் ஹுபே மாகாணத்தில் அமைந்த நகரமே வுஹான் நகரமாகும்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் முதலில் பரவத்தொடங்கிய வுஹான் நகரத்தின் மீதான முடக்கலை முடிவிற்கு கொண்டுவந்துள்ள சீனா அதிகாரிகள் போக்குவரத்திற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதை தொடர்ந்து ஜனவரி 23ஆம் திகதி வுஹானை கடுமையான முடக்கலிற்கு உட்படுத்தும் உத்தரவை சீனா அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தவாறே தங்களது கடமைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது வுஹான் மீதான முடக்கல் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நகரிலிருந்து சீன தலைநகரிற்கு பயணத்தினை மேற்கொண்டுள்ளனர். வுஹானின் வுச்சாங் புகையிரத நிலையத்தில் முதலாவது புகையிரதத்திற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts:


ஒரு வாரத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் - பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 2 ஆம...
பாடசாலைகளின் இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்றுமுதல் ஆரம்பபம் - கல்வி அமைச்...
பிரிகோஜின் சிக்கலான விதியை கொண்டவர் - வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித...