கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

Wednesday, February 10th, 2021

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போது, நேற்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய கொவிட் தடுப்பு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே உடல்களை புதைப்பதால் நீரின்மூலம் கொரோனா வைரஸ் பரவாது எனத் தெரிவித்திருந்தார்.

அவ்வாறெனில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை புதைக்க ஏன் அனுமதி வழங்க முடியாது என கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: