கொரோனா தாக்குதல்: குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

Wednesday, January 29th, 2020


சீனாவின் மூன்று நகரங்களை சேர்ந்த மக்கள் நாட்டிற்கு வருவதற்கான விசாவை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இரத்து செய்துள்ளது.

வுஹான், ஹூவெங்ஹென்ஞ் மற்றும் ஏசு ஆகிய மூன்று நகரங்களுக்கான விசா இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இன்றுமுதல் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சீனாவிலுள்ள மேலும் 54 நகரங்களிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் முன்கூட்டியே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வழிமுறையாக பயணிகள் தவிர்ந்த, அவர்களுடன் வருவோர் விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க இன்று காலை 6 மணி முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சீனாவில் இருந்து வருகை தருகின்ற பயணிகள் விமான நிலையத்தின் விசேட முனையத்தின் ஊடாகவே உள்வாங்கப்படுகின்றனர்.

நேற்று முற்பகல்வரை சீனாவிலிருந்து 150-க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

சீனாவின் ரியான்ஜிங்கில் இருந்து நேற்று பகல் புறப்பட்ட 21 மாணவர்கள் நேற்றிரவு 7.30 அளவில் நாட்டை வந்தடைந்ததுடன், மற்றுமொரு குழுவினர் இன்று அதிகாலை 5 மணிக்கு வருகை தந்தனர்.

இவர்களை ஏற்றிய ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் சீனாவின் பெய்ஜிங், குவன்ஷு மற்றும் ஷென்ஹாய் ஆகிய பகுதிகளிலிருந்து நாட்டை வந்தடைந்தன

Related posts:

கொரோனா பாதிப்பு குறித்து போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை – நவம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்ப...
ஓய்வுபெறும் அரச அதிகாரிகள் இனி வாகனங்களை கொண்டு செல்லமுடியாது - அரச நிறுவனங்களுக்கு திறைசேரி உத்தரவு...
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி - எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் ...