கொரோனா தடுப்பூசி செப்டெம்பருக்குள் தயாராகிவிடும் – ஒக்ஸ்பேர்ட் விஞ்ஞானி தகவல்!

Wednesday, April 15th, 2020

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இதற்கான தடுப்பூசி செப்டெம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று ஒக்ஸ்பேர்ட் விஞ்ஞானி ஒருவரை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸிறகு இதுவரை 114000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய் எளிதாக பரவுவதால் இதற்கான தடுப்பூசியை உலகின் பல்வேறு நாடுகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.

அதற்கான வேலைகளும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி செப்டெம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று அதன் கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் ஒக்ஸ்வோர்ட் பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சி குழுவில் இருக்கும் விஞ்ஞானி சாரா கில்பர்ட் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எங்களது குழு கண்டுபிடிக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக அமையும். அதில் தனக்கு 80 சதவீதம் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி செப்டெம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று நம்புகின்றேன். அதே நேரத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் இந்த தடுப்பூசிக்கான சோதனைகளை மனிதர்கள் மீது நடத்தவுள்ளோம். அத்துடன் இந்த வகை தடுப்பூசி நாங்கள் செய்த பிற ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்

Related posts: