கொரோனா சிகிச்சை: இலங்கைக்கு பெருந்தொகை மருந்துகளை அனுப்பியது இந்தியா!

Wednesday, April 8th, 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள இலங்கைக்கு இந்தியா அரசு 10 தொன் எடையைக் கொண்ட அத்தியாவசிய மருந்துப்பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் இந்த அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துப்பொருட்கள் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் விசேட விமானத்தில் எடுத்து வரப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிரகம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவிற்கு அமைய இந்த மருந்து தொகை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் இந்த உதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றிகளை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: