கொரோனா குறித்து தேவையற்ற அச்சங்களை மருந்து நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. – அமைச்சர் டலஸ் அலகபெரும குற்றச்சாட்டு!

கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற அச்சங்களை பாரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கின என அமைச்சர் டலஸ் அலகபெரும மாத்தறையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்கள் நலனை முன்னெடுப்பதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் சாதாரண கண்களிற்கு தெரியாது ஆனால் அதனை ஒரு வெடிக்கும் பொருள் அல்லது மாயத்தோற்றம் போன்று சித்தரித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
இலங்கையின் மீன் ஏற்றுமதி தடை முழுமையாக நீக்கம்!
ஊஞ்சல் கயிறு நெரித்து சிறுமி பரிதாப பலி!
பகிடிவதை சட்டம் - மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கு!
|
|