கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: நடன ஆசிரியையும் தாயும் படுகாயம்!  

Monday, April 30th, 2018

கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக் குழு ஒன்று நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

மோட்டார் சைக்கிளில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் கும்பல் வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகாயமடைந்த இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடன ஆசிரியை கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றுகிறார்.

Untitled-3 copy

Related posts: