கூட்டணி கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதனூடாக அரசின் பலம் மேலும் வலுவடையும் – பிரதமர் மகிந்த நம்பிக்கை!

Tuesday, April 13th, 2021

ஆளும் கூட்டணி கட்சிகளுடன் நடத்தப்பட உள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கம் மேலும் வலுப்பெறுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெனினிங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் எதிர்வரும் 19 ஆம் திகதி கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் ஆளும் கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் உருவாகும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினாலும், ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன குறித்து தீர்மானம் எடுக்கும் போது ஆளும் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமானது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: