கூடிய விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Monday, November 26th, 2018

அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர்கள் சிலர் கூடுதலான விலைக்கு உரத்தை விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலான விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக 0112 88 47 77 என்ற தொலைபேசி இலக்கத்தின்  ஊடாக அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு குறித்த செயலகம் பொதுமக்களை கேட்டுள்ளது.

Related posts: