குவைத் நாட்டிற்கு வீட்டு பணியாளர்களாக செல்வோருக்கு காப்புறுதி!

Thursday, May 30th, 2019

வீட்டுப் பணியாளர்களாக குவைத் நாட்டுக்கு செல்வோருக்கு இந்த ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி முதல் அந்நாட்டில் காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த காப்புறுதி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் அல்லது சுயமாக குவைத்தில் வீட்டு பணியாளர்களாக செல்வோருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பணிக்கு இணைத்துக் கொள்ளப்படும் அந்நாட்டு வீட்டு உரிமையாளர்களினால் Gulf Insurance and Re insurance (GIRI) என்ற காப்புறுதி நிறுவனத்தினால் இந்த காப்புறதியை பெற்றுக்கொள்ள முடியும்.

குவைத்துக்கு தொழிலுக்காக செல்லும் பொழுது குவைத் அலுவலகத்தில் தொழிலுக்கான உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொழுது இந்த காப்புறுதி அவசியமாகும்.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவை மேற்கொள்ளும் பொழுது தொழில் உடன்படிக்கையுடன் இந்த காப்புறுதி உறுதியையும் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காப்புறுதி தற்பொழுது நடைமுறையில் உள்ள நிவாரண காப்புறுதிக்கு மேலதிகமாக வழங்கப்படும் ஒன்றாகும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts: