குவைத்திலிருந்து 4000 இலங்கையர்கள் இலங்கைக்கு!

Tuesday, February 20th, 2018

குவைத்தில் விசா இன்றி வசித்து வந்த இலங்கையர்களை அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 22ஆம் திகதியுடன்முடிவடைகின்றது.

4 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்தப் பொது மன்னிப்புக்காலத்தைப் பயன்படுத்தி நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம்தெரிவித்துள்ளது.

மேலும் நாடு திரும்ப 800 பேர் தயாராகி வருகின்றனர். உரிய விசா அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 15 ஆயிரம் இலங்கை ஊழியர்கள் குவைத்தில் தங்கியிருப்பதாக அமைச்சர்தலதா அத்துக்கோரள இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: