குழந்தைகளுக்கு பால்மா கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு ஒப்பானது!

Wednesday, August 8th, 2018

குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கு தேவையான தாய்ப்பாலை கொடுப்பதை தவிர்த்து ஏனைய பால்மா வகைகளை கொடுத்திடும் செயற்பாடு தாம் பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்திடும் செயற்பாட்டிற்கு சமம் எனத் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் சனூஸ் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தாய்ப்பாலுக்கு சர்வதேச ரீதியில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பதை சர்வதேச தாய்ப்பால் தினம் சுட்டிக் காட்டுகின்றது. ஒரு தாய் பாலூட்டல் மூலம் 42 சதவீதமான புற்றுநோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஒரு தாயினால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு மட்டும் நன்மை கிடைப்பதில்லை.

தாய்க்கும் பல்வேறு வழிகளில் நன்மை கிடைக்கின்றது. பிறந்த குழந்தையொன்று தொடர்ச்சியான அதன் ஆறு மாத காலத்திற்கு தாய்ப்பாலை மட்டும் உட்கொள்ளும்போது ஆறு மாத காலத்திற்கு பின்னர் இரண்டு வருட காலத்திற்குள் ஏனைய உணவுகளுடன் தாய்ப்பாலையும் சேர்த்துக் குடுக்கும் பட்சத்தில் குழந்தையானது அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்திகளைப் பெறுவதோடு புரதம் உட்பட பல்வேறு சத்துகள் குழந்தைக்குக் கிடைக்கின்றன.

இவ்வாறு தாய்ப் பாலூட்டத்தால் வளரும் குழந்தை எதிர்காலத்தில் பூரண ஆரோக்கியமான பிரஜையாக தோற்றம் பெறும். ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் மார்பகப் புற்றுநோயிலிருந்து 42 சதவீதம் பாதுகாத்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாது வயதான காலங்களில் ஏற்படும் எலும்பு முறிவு, எலும்பு தேய்வு போன்றவை ஏற்படாமலிருப்பதற்கும் மிக அவசியம்.

சந்தைகளில் காணப்படும் பால்மாவைத் தவிர்த்து தாய்ப்பாலை ஒரு குழந்தைக்குக் கொடுப்பதன்மூலம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதோடு அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்றார்.

Related posts: