குருநகர் பிரதேச வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை – நோயாளர்கள் அவதி!
Wednesday, January 9th, 2019குருநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையால் நாளாந்தம் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறித்த வைத்தியசாலைக்கு நாளாந்தம் அதிகமான நோயாளர்கள் சேவை பெறச் செல்வதாகவும் இரு வைத்தியர்கள் நோயாளர்களைப் பார்வையிட இருந்தும் பதிவிலக்கம் வழங்கும் ஊழியர்கள் இரு சேவைகளைச் செய்வதால் நீண்ட நேரம் தாம் வைத்தியசாலையில் காத்திருக்க நேரிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு மருந்து கட்டும் ஊழியரே பதவிலக்கத்தையும் வழங்குவதால் அவர் நோயாளர்களுக்கு மருந்து கட்டி வரும் வரையில் வைத்தியர் பார்வையிடுவதற்கு நோயாளர்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே இப் பிரதேச மக்களின் தேவையை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|