குண்டுத் தாக்குதலின் எதிரொலி : பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விஷேட நடவடிக்கை!

நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் காரணமாக கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இதுவரை ஆரம்பிக்கப்படாத நிலையில் அனைத்துப் பாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கு முன்னதாக நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலை வளவுகள் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இது தொடர்பாக அனைத்து பாதுகாப்பு முக்கியஸ்தர்களுக்கும் அறிவித்துள்ளார்.
அத்துடன் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்கவினால் பாடசாலை வளவு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி முப்படையினர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
|
|