குடாநாட்டில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த புதிய பொலிஸ் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்துள்ள குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கு துவிச்சக்கர வண்டி பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் பிரிவு யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த பிரிவு இருபத்தி நான்கு மணிநேரமும் தமது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.
இதன் ஆரம்ப வைபவம் இன்று காலை யாழ்.தலைமை பொலிஸ் நிலையம் முன்பாக நடைபெற்றது.
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்தின பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இந்த பிரிவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை - பிரசுர ஆணையாளர் நாயகம்!
சீன ஜனாதிபதி - பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!
எமது குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணைகளையும் எதிர்கொள்ளத் தயார் – நாட...
|
|