குடாநாட்டின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய தெரிவிப்பு!.

Thursday, May 28th, 2020

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அத்துடன் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது எனவும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்றையதினம் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியிருந்ததுடன் பொலிஸார் ஒருவர் காயமடைந்திருந்தார்.

இந்த வெடிப்புச் சம்பவமானது சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார்  நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வெடிப்பு சம்பவம் பட்டாசுகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் ஆரம்ப நிலை வெடிப்புச் சம்பவமொன்று எனவும் மேஜர் ஜெனரல் வனிகசூரிய மேலும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: