கிளிநொச்சி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம்!

Monday, June 25th, 2018

கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நோயாளர்களின் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு நன்கொடையாளர்களால் 3 நீர் சுத்திகரிப்பு இயந்திர தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
அதன்மூலம் வைத்தியசாலை விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் உட்பட பலரும் தமக்கான சுத்தமான குடிநீரை பெற்று வந்தனர்.
தற்போது மூன்று நீர் சுத்திரகரிப்பு இயந்திரங்களும் பழுதடைந்தது காணப்படுவதால் வைத்தியசாலையின் உள்நோயாளர்கள், வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் தமக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ள முடியாது பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டோர் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts: