கிளிநொச்சியிலும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள் – பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் நிமல் அருமைநாதன் எச்சரிக்கை!

Friday, August 13th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 150 பேர் கொரோனான தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் நிமல் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

பி. சி. ஆர்., அன்டிஜென் பரிசோதனைகளிலேயே இந்தத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் நாளுக்குநாள் தொற்றாளர்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றனர். இதனால் அபாய மாவட்டமாக கிளிநொச்சியும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

அதனடிப்படையில் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்தால் மட்டுமே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நேற்றுமுன்தினமும் கிளிநொச்சியில் 126 கொரோனா தொற்றாளர்கள் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: