கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி சில வாரங்களில் பூர்த்தி – உள்நாட்டலுவல்கள் அமைச்சு!

Thursday, May 17th, 2018

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி எதிர்வரும் சில வாரங்களில் பூர்த்தி செய்யப்படும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்காக 2016ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் போட்டிப் பரீட்சை இடம்பெற்றது. இதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22ம் திகதி முதல் நவம்பர் மாதம் 21ம் திகதி வரை நடைபெற்றது.

இது தொடர்பான புள்ளிகள் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தகுதியைப் பூர்;த்தி செய்த பரீட்சார்த்திகளுள் ஆயிரத்து 730 பேர் நியமனத்திற்காகத் தெரிவாகியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்கள் மார்ச் மாதம் 23ம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான கடிதங்களை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் சில வாரங்களில் இடம்பெறும். 14 ஆயிரத்து 22 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் இரண்டாயிரம் கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: