கிணற்றடியில் மயங்கிவீழ்ந்த மூதாட்டி உயிரிழப்பு!

Monday, January 15th, 2018

தைப்பொங்கல் தினமான நேற்றுக்ககாலை நீராடிய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுக்காலையில் அவர் மயங்கிவீழ்ந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கைதடி நவபுரத்தில் நடந்துள்ளது. புத்தூரைச்சேர்ந்த நாராயணி புதியாள் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் கணவர் மற்றும் பிள்ளைகள் இல்லாத நிலையில் தனது பெறாமகளின் வீட்டில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கிணற்றில் தொட்டிக்குள் தண்ணீர் அள்ளி நிரப்பிவிட்டு அமர்ந்திருந்த நீராட்டிய வேளையில் மயங்கிச்சரிந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தபோது பரிசோதனை செய்;த வைத்தியர் அவர் உயிரிழந்துவிட்டார்  விட்டார் எனத்தெரிவித்துள்ளார்.

மூதாட்டியின் இறப்புத்தொடர்பாக சாவகச்சேரிப்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பதில் நீதிவான் முன்னிலையில் அறிக்கைத்தாக்கல் செய்யப்பட்டு பதில் நீதிவான் பிரதேச திடீர் சாவு விசாரணை அதிகாரி சீ.சீ. இளங்கீரன் மூலம் இறப்ப விசாரணைகள் நடாத்தி நீதிமன்றில் அறிக்கைத்தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்குப்பணித்தார்.

Related posts: